மன்னார்குடியில் அமமுக வேட்பாளர் டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து , விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியும் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரிப்பு
வரும் 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் வேட்பாளர்கள் பிரச்சார சுற்றுப்பயணம் நாளுக்கு நாள் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது.
அந்த வகையில் வேட்பாளர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ்.காமராஜ் வ.ஊ.சி சாலை , புதிய பைபாஸ் சாலை , பூக்கொல்லை ரோடு, காவேரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
முன்னதாக டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்து விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியும் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.