C K RAJAN
Cuddalore District Reporter
94884 71235..
கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு நடைபெறும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை முன்னிட்டு கடலூர் புதுப்பாளையம் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி ஜான்டூவி தொடக்கப்பள்ளி ஆகிய மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்-1, வாக்குப்பதிவு அலுவலர்-2, வாக்குப்பதிவு அலுவலர்-3 ஆகியோர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
151-திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு திட்டக்குடி ஸ்ரீ ஞானகுரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 1340 நபர்களுக்கும், 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 1520 நபர்களுக்கும், 153- நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு நெய்வேலி டவுன்ஷிப் ஜவஹர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1228 நபர்களுக்கும், 154– பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி ஜான் டூவி தொடக்க பள்ளியில் 1484 நபர்களுக்கும் 155 – கடலுர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1240 நபர்களுக்கும், 156 – குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பார்வதிபுரம் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் 1336 நபர்களுக்கும், 157 – புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புவனகிரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1460 நபர்களுக்கும், 158 – சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணாமலை பல்கலை கழகம் கே.ஆர்.எம் டெக்பார்க்கில் 1432 நபர்களுக்கும், 159 – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டுமன்னார் கோயில் ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியில் 1396 நபர்களுக்கும், (அரசு மருத்துவமனை அருகில்), உடையார்குடி ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்-1, வாக்குப்பதிவு அலுவலர்-2, வாக்குப்பதிவு அலுவலர்-3 என மொத்தம் 12,436 அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது. மேலும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு 22.04.2026 அன்றும் நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவிற்கு தேவையான தேர்தல் பொருட்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், மண்டல அலுவலர்கள் ஒப்படைக்கும்போது பட்டியலில்ட உள்ளவாறு சரிபார்த்துக் கொள்ளவேண்டும்,மேலும் வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் நண்பகல் 12.00 மணிக்கு வாக்குச்சாவடிக்கு சென்றடைய வேண்டும். மண்டல அலுவலரிடமிருந்து வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை பெறும்போது பட்டியலில் உள்ளவாறு எந்தவொரு பொருளும் விடுபடாமல் சரிபார்த்து பெற்றுக்கொள்ளவேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்தித்தை வைக்கும்போது போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.மாதிரி வாக்குப்பதிவினை முகவர்கள் முன்னிலையில் காலை 5.30 மணி அளவில் தொடங்கவேண்டும்.முகவர்கள் எவரும் வரவில்லை எனில்5.45 மணி வரை காத்திருந்து மாதிரி வாக்குப்பதிவினை நடத்தப்படவேண்டும்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியின் போது பதற்றமின்றி வாக்கு பதிவினை நடத்திட வேண்டும். வாக்கு பதிவினை நல்ல முறையிலும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்திட வேண்டிய பொறுப்பு மற்றும் கடமை வாக்குபதிவு அலுவலர்களுக்கு உள்ளது. வாக்குபதிவு குறித்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை முறையாக வெளிப்படை தன்மையுடன் பின்பற்றி செயல்படவேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார், தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி கமலம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவக்குமார,
பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.