தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தபால் வாக்களித்தனர்
திருவொற்றியூர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 800 அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மாதவரம் ஆவடி அம்பத்தூர் மதுரவாயல் பூந்தமல்லி திருவள்ளூர் திருத்தணி பொன்னேரி கும்மிடிப்பண்டி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவை செலுத்தினர்
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரிசையில் நின்று தபால் ஓட்டு அளித்தனர் தமிழகத்தில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது கட்ட பயிற்சியின் போது தபால் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் வட்டாட்சியர் திலீப் குமார் தலைமையில் தபால் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திருவொற்றியூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயில், அம்பத்தூர், மாதவரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்கான தபால் வாக்களிக்கப்பட்டது
வாக்களார் அட்டை யை வைத்து வரிசையில் நின்று தங்களது தபால் வாக்குகளை செலுத்தினர்
இடது கைவிரலில் ஓட்டு போட்டதற்கான அடையாளம் மை வைக்கப்பட்டன