தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு வரும் 22 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் மாலை 3:30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு, கும்பகோணம், திருச்சி வழியாக மறுநாள் காலை 5:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். பொதுமக்கள் இந்த சிறப்பு ரயிலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மண்னை
க.மாரிமுத்து.