தமிழ்ப் பல்கலைக்கழகம், இலக்கியத்துறை சார்பாக மாணவர் பெருவுடையான் (எ ) ச பிரகதீஸ்வரன் அவர்கள் இயற்றிய இணர் (மரபுக் கவிதைத் தொகுப்பு) நூல் அரங்கேற்ற விழா சிறப்பாக நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்ககைக்கழக துணை வேந்தர் (பொ) மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் முனைவர் மரு. பெ. பாரதஜோதி தலைமை தாங்கினார். பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.. இலக்கியத்துறையின் பேராசிரியர் (ம) தலைவர் முனைவர் ஜெ.தேவி நோக்கத்தை உரையாற்றினார். இலக்கியத்துறை பேராசிரியர் முனைவர் பெ. இளையாப்பிள்ளை வாழ்த்தினார்.
தொடர்ந்து… இந்திய மொழிகள் (ம) ஒப்பிலக்கியப்பள்ளி துறையின் பேராசிரியர் முனைவர் இரா. வெங்கடேசன் பேசியதாவது இணர் என்னும் பெயரில் அமைந்த மரபுக்கவிதைத்தொகுப்பு நம் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்கிற செய்தியைப் பதிவு செய்தார்கள்.
விழாவில் . அறிவியல் தமிழ் (ம) தமிழ் வளர்ச்சித்துறை பேராசிரியர் முனைவர் சி. தியாகராஜன் கூறியதாவது இலக்கியத்துறையில் மாணவர் படைத்த ‘இணர் ” என்னும் மரபுக்கவிதை நூல் பாடத்திட்டத்தில் இடம் பெறுவது இதுதான் முதல்முறை, வாழ்க தமிழ்ப்பணி என்று வாழ்த்துரை வழங்கினார்.
அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறையின் பேராசிரியர் (ம) புல முதன்மையர் அவர்கள் கவிதையின் சிறப்புகளை எடுத்துக்கூறி மேலும், பல கவிதைகளைப் பிரசவிக்க வேண்டும் என மனதார வாழ்த்தி அகமகிழ்ந்தார்.
மேலும், மெய்யியல் துறையின் பேராசிரியர் (ம) தலைவர் கோ.ப. நல்லசிவம் கூறியதாவது ” நஞ்சைப் பயிர் வளர்த்த தஞ்சையில் நெஞ்சப்பயிர் வளர்த்துள்ளார்”. வடிவம் பழமையாக இருந்தாலும் சொற்கள் புதுமையாக இருப்பது இக்கால வெற்றி என்றே கூறலாம். இன்றைய இளைஞர்களுக்கும் நாளைய கவிஞர்களுக்கும் எடுத்துக்காட்டாக கவிஞர் பெருவுடையானும் அவர் கவிதையும் அமையும் தைப்பிறந்தால் வழி பிறக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நூல் பிறக்கும் என்கிற செய்தியைப் பதிவு செய்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
கோவை, பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் (ம) தமிழ்க்கல்லூரியின் முதல்வர் (பொ), முனைவர் கா. திருநாவுக்கரசு அவர்களின் திருக்கரங்களால் இணர் (மரபுக் கவிதைத் தொகுப்பு) நூல் வெளியிட்டு தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அன்புடன் பெற்றுக்கொண் டனர்.
கவிஞர் எழுதிய நூலுக்கான இயல் விளக்கம் நூலாசிரியர் கூற இசை வடிவம் வழங்கி சிறப்பித்தவர் பேரூர்த் தமிழ்க் கல்லூரியின் இளம் இலக்கியவியல் மாணவி ஏழிசைச் செல்வி, ச. தேவதர்ஷினி அவர்கள்.. இவர் உலக சாதனை நிகழ்வில் இறைப்பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு விருந்தினராக கோவை, பேரூர்,தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் மற்றும் தமிழ்க்கல்லூரியின் முதல்வர் (பொ), முனைவர் கா. திருநாவுக்கரசு கலந்துகொண்டு …துறவோர்களையும், அறிஞர்களையும் போற்றும் இடம்தான் தமிழ்ப் பல்கலைக்கழகம். ஒரு நூல் வெளியீட்டு விழாவில் அத்துனை பேராசிரியர்களும் கலந்து கொண்டு மனமுவந்து வாழ்த்தினார்கள். எது சிறந்ததோ அதை போற்றுவதுதான் சிறப்புரை. மாணவர்களை உருவாக்குவதும் கருவாக்குவதும் அவ்வளவு எளிதல்ல. எங்களுக்கெல்லாம் வயதாகி விட்டது அத்தோடு நாங்கள் ஓய்வதில்லை. இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவோம். ஊசியால் உடலில் மருந்தினை செலுத்தினால் ஒவ்வொரு செல்லிலும் சென்று செயல்படும் , அதுபோலத்தான் தொல்காப்பியம். பாக்களை இயற்றும்போது கவனமுடன் இருக்க வேண்டும் இல்லையென்றால் கலிப்பா வெண்பாவாகவும் வெண்பா கலிப்பாவாகவும் மாறிவிடும் .என்றார்.முன்னதாக முதுகலை இரண்டாமாண்டு மாணவன் சி. கதிர்வேல் வரவேற்றார். நிறைவில் முதுகலை இரண்டாமாண்டு மாணவர் நொ. சேவுகமூர்த்தி நன்றி கூறினார்