தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் ஏப்ரல்- 20,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொரேகா நகர் பகுதியில் இயங்கி வரும் அகரம் பள்ளி மாணவ மாணவர்கள் சுமார் 3000 மேற்பட்ட இருபாலரும் சிறந்த முறையில் பயின்று வருகின்றனர்..
இவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால் அவர்கள் செல்போனை பார்த்து நல்ல விஷயங்கள் மட்டும் கெட்ட விஷயங்களை பார்த்து பழகுவதை விட “அறிவுத்திறன்” உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் “விஞ்ஞானிகளின் புத்தகங்கள்” மற்றும் “விளையாட்டு புத்தகங்கள்” படிக்க வேண்டும் என்று பள்ளி முதல்வர் ஞான பண்டிதர் தெரிவித்தார்.
இப்பள்ளியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட “அறிவு திறன்” உள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களை கண்காட்சிக்காக வைக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் அதிலிருந்து குற்றங்களை வாங்கிச் செல்ல வேண்டும் கோடை விடுமுறையை புத்தகம் படித்து பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்
பொது அறிவு வளர வேண்டும் எனில் பல நூல்களைப் படித்து மாணவர்கள் பயன்பெற வேண்டும் பொது அறிவு புத்தகங்களான திருவள்ளுவர் உள்ளிட்ட கவிஞர்களின் அனைத்து இதழ்களும் இதில் இடம்பெற்றுள்ளது.
பள்ளி மாணவ மாணவர்கள் கோடை விடுமுறையை கழிப்பதற்கு புத்தக கண்காட்சியை திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.. நிகழ்ச்சியில் தாளாளர்கள் பள்ளி முதல்வர் ஆசிரிய ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்..