தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் உழவர் சந்தையில் விவசாயிகளை சந்தித்த திமுக வேட்பாளர் இந்திராணி — சாதனைகள் விளக்கம், உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணி இன்று உழவர் சந்தை பகுதியில் விவசாயிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, திமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். விவசாயிகளுக்கு 5 லட்சம் பம்ப்செட்டுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இலவச மின்சார மின் இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் ரூ.7,500 கோடி வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும், உழவர் சந்தை திட்டத்தை கலைஞர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தியதும் திமுகவின் முக்கிய சாதனைகள் எனவும் அவர் எடுத்துக்காட்டினார்.
இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது, நகரச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.