தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853

தாம்பரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பெருங்களத்தூர் 56-வது வார்டில், வீடு வீடாக நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கழக வேட்பாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் பெருங்களத்தூர் 56வது வார்டில் வீதி வீதியாக சென்று வீடுவீடாக ஒவ்வொரு மக்களையும் சந்தித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து அதிமுக ஆட்சி அமைந்த உடன் துண்டு பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குறுதிகளையும் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடி யார் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அனைத்தையும் நிறைவேற்றப்படும் என பொதுமக்களிடம் கூறி துண்டு பிரசுரங்கள் கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்

அவருடன் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான டி கே எம் சின்னையா, தாம்பரம் தொகுதி பொறுப்பாளர் பல்லாவரம் முன்னாள் எம்எல்ஏ ப.தன்சிங், பெருங்குளத்தூர் பகுதி கழக செயலாளர் சீனு பாபு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பி.எஸ்.ஆர் சரவணகுமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பம்மல் த.முகுந்தன், பெருங்களத்தூர் எச்.உதயகுமார் பெருங்களத்தூர் பகுதி கழக வட்ட செயலாளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு வீடு வீடாக வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *