திருச்சி பார் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் தேர்வு! வாழ்த்து தெரிவித்த
பெண் வழக்கறிஞர்கள்!

திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திருச்சி பார்
அசோசியேசன் 2026-2027 ஆண்டிற்கான தலைவர், செயலர், பொருளாளர்,இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு இணைச் செயலாளர்கள், 16 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. 1500 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் வாக்காளர்களாக உள்ள நிலையில் சுமார் 1300 வழக்கறிஞர்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டது.

அதில் தலைவராக பாலசுப்பிரமணியம், செயலராக ஆரோக்கியசாமி, பொருளாளராக பிரதீப், துணைத் தலைவர்களாக கண்ணன் மற்றும் சுதா, இணைச் செயலாளராக ராஜா ரவிவர்மா மற்றும் சுபா ஸ்ரீ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்கள் 16 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


மூத்த வழக்கறிஞர்கள் ராஜேஸ்வரி, செயற்குழு உறுப்பினர் ஷானவாஸ்,
மெஹராஜ், விஜயாபாபு, சித்ரா,கவிதா, செந்தில் வடிவு, கனிமொழி, ரஞ்சனி,வனஜா, எஸ்தர் உட்பட பலர் 2026-2027 புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *