வந்தேமாதரம் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மீட்டர் ஃபிராங்கிங் அஞ்சல் முத்திரை

வந்தேமாதரம் 150வது ஆண்டு நிறைவைக்குறிக்கும் மீட்டர் ஃபிராங்கிங் அஞ்சல் முத்திரை தற்போது அஞ்சல் உறையில் அச்சிடப்படுகிறது. இது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும் அஞ்சல் தலை சேகரிப்பாளருமான விஜயகுமார் பேசுகையில்,சிறப்பு அஞ்சல் முத்திரை ரத்து என்பது, முக்கிய நிகழ்வுகள், ஆண்டுவிழாக்கள் அல்லது கண்காட்சிகளை நினைவுகூறும் வகையில் அஞ்சல் துறையால் வழங்கப்படும் ஒரு தனித்துவமான, தற்காலிக அஞ்சல் முத்திரையாகும். இந்த முத்திரை ரத்துகள் சிறப்பு வடிவமைப்புகள் அல்லது வரைகலைகளைக் கொண்டிருக்கும், மேலும் அவை குறிப்பிட்ட தேதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.


அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் முத்திரை சேகரிப்பாளர்கள் அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் தனித்துவமான கலைநயமிக்க வடிவமைப்புகளுக்காக இவற்றை சேகரிக்கின்றனர்.


அவ்வகையில்,வந்தே மாதரம் எனும் தேசிய கீதத்தின் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கும், சுதந்திரப் போராட்டத்தில் அதன் வரலாற்றுப் பங்கை எடுத்துரைப்பதற்கும், பிரத்யேகமான தபால் முத்திரைகளும் ரத்து முத்திரைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரத்து முத்திரைகள், பெரும்பாலும் அஞ்சல் உறைகளில் உள்ள முத்திரைகளுடன் இணைக்கப்பட்டு முத்திரையிடப் படுகின்றன, தேசிய கீதத்தின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்தியப் பிரதமர் 2025 நவம்பர் 7 அன்று சிறப்பு அஞ்சல் தலைகளையும் நாணயங்களையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

வங்கமொழிக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி கடந்த 1875 நவம்பர் 7-ம் தேதி ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதினார். இந்த பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இப்பாடல் மிகுந்த உத்வேகம் அளித்தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஜனவரி 24-ம் தேதி இது தேசியப் பாடலாக அறிவிக்கப்பட்டது.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு அஞ்சல் முத்திரை அச்சிடப் படுகிறது.இந்தியாவில் மீட்டர் ஃபிராங்கிங் மொத்தமாக அஞ்சல் அனுப்புவதற்காக பயன்படுத்தப்படும், டிஜிட்டல் அடிப்படையிலான அஞ்சல் முறையாகச் செயல்படுகிறது.தபால்தலைகளுக்குப் பதிலாக, அஞ்சல் உறைகளில் நேரடியாக அஞ்சல் கட்டணத்தை அச்சிடும் ஒரு சாதனம் தான் ஃபிராங்கிங் இயந்திரம். இது அஞ்சலின் எடை மற்றும் அளவின் அடிப்படையில் சரியான அஞ்சல் கட்டணத்தைக் கணக்கிட்டு அச்சிடுவதன் மூலம், அஞ்சல் அனுப்பும் செயல்முறைகளைச் சீரமைத்து, வணிகங்களுக்கான செலவுகளையும் குறைக்கிறது.150வது ஆண்டு நிறைவு விழா கருப்பொருளைக் கொண்ட சிறப்பு மீட்டர் முத்திரையிடல் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில், வந்தே மாதரம் முத்திரை ஒரு சிறப்பு ரத்துச் சின்னத்தையும் இணைக்கும் “கலவை ரத்துசெய்தல்கள்” அடங்கும். இவை சுதந்திரப் போராட்டத்தின் போது சுதந்திரத்திற்கான ஒருமைப்பாட்டு முழக்கமாக அப்பாடலின் பங்களிப்பை நினைவுகூறுகின்றன. முத்திரையிடப்பட்ட இந்த பொருட்கள் அஞ்சல்தலை முத்திரை சேகரிப்பில் இடம் பெற்றுள்ளன என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *