தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பாா் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது தூத்துக்குடியில் வாக்களித்த பின் அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
தூத்துக்குடி தமிழகத்தில் 17வது சட்டமன்ற தோ்தல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள் 6,77,004, பெண்கள் 7,10,981, மூன்றாம் பாலினத்தவர் 201 என மொத்தம் 13,88,186 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்களிப்பிற்காக 1868 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் காலை சரியாக ஏழு மணிக்கு வாக்கு பதிவு ஆலுவலா்களால் தொடங்கியது. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போல்பேட்டை கீதாமெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குபதிவு மையத்தில் தனது குடும்பத்துடன் வரிசையில் நின்று தனது முதல் வாக்காளராக தனது வாக்கினை பதிவு செய்தார். அதிகாலையிலே வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதாக இணைந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த பின்னா் அமைச்சர் கீதாஜீவன் அளித்த பேட்டியில் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறாா். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பாா். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்று கூறினாா்.
பேட்டியின் போது மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளரும் அமைச்சரின் கனவருமான ஜீவன்ஜேக்கப், மகன் மகிழ்ஜான், மகள் ஜீனா ஜீவன், ஆகியோா் உடனிருந்தனா். பின்னா் வாக்குபதிவு மையத்தை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று பாா்வையிட்டாா்.