தேமுதிக செய்யூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ஏ சிவா குடும்பத்துடன் வாக்களித்தார்
கல்பாக்கம் ஏப் 23
தமிழக சட்ட மன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் காலை வாக்கு பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்தே பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்
கூவத்தூர் கிராமம் கீழார்க் கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கீழார் ஏ. சிவா தேமுதிக கட்சியின் செய்யூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் முன்னாள் இலத்தூர் ஒன்றிய செயலாளருமான இவர் தனது குடும்பத்துடன் கீழார்க் கொல்லை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தமது வாக்கைப் பதிவு செய்தார்