எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சட்ட மன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்தி வாக்களித்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.சீர்காழியில் 34.93 சதவீதம் வாக்கு பதிவு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி 160 தனி சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து 29 மண்டலங்களாக பிரித்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது இந்நிலையில் சீர்காழி தனி (160) சட்ட மன்ற தொகுதியில் மொத்தம் 2,41,319 வாக்காளர்கள் உள்ளனர். சீர்காழி சட்டமன்ற தொகுதியில் அதிமுக, மதிமுக, தவெக , நாதக, உள்ளிட்ட 10 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.NDA கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ம.சக்தி தனது வாக்கினை சொந்த ஊரான எருக்கூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
அதேபோல் அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தனது உறவினரின் உதவியுடன் சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதிகாலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் இன்று வாக்கு செலுத்தி வருகின்றனர் சீர்காழியில் 11 மணி நிலவரப்படி 34.93 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது