கோவையில் வாக்களித்த பப்புவாநியூ கினியா நாட்டின் வர்த்தக தூதர் தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பெருமிதம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது கோவை மாவட்டத்தில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர் இந்நிலையில் பப்புவாநியூ கினியா நாட்டின் வர்த்தக தூதரான கோவையில் வசித்து வரும் விஷ்ணுபிரபு தனது குடும்பத்தினருடன் வாக்களிக்க குனியமுத்தூர் நிர்மலா மாதா கான்வென்ட் பள்ளி வாக்கு சாவடிக்கு வருகை புரிந்தார்.
அங்கு தமது வாக்கை பதிவு செய்த அவர்,தமிழக தேர்தல் ஆணையம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும்,ஜனநாயக கடமையை அனைவரும் நிறைவேற்றி நூறு சதவீத வாக்குகளை பதிவு செய்யுமாறு அவர் கேட்டு கொண்டார்..