செய்தியாளர்
அ.சிராஜுதீன்.

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் வாக்குப்பதிவுகளை ஆய்வு செய்ய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு செய்தார் அப்போது திருப்பனந்தாள் ஒன்றியம் திட்டச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட்டு பின்பு செய்தியாளர்களிடம் கூறியது:-

திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்காளர்கள் வாக்களித்து கூடிய விகிதாசாரத்தை பார்வையிட்டு வருகிறேன்.

கடந்த 5 ஆண்டு கால திமுக செய்த பணிகள்
திமுகவின் தேர்தல் அறிக்கையால் கிராமப்புறங்களில் பிரதிபலிப்பதை பார்த்து வருகிறோம,அனைத்து தரப்பு மக்களும் திமுக தொடர வேண்டும் என கருதுகிறார்கள்.

நேற்று காலையில் நடிகர் அஜித், மாற்றம் தேவையில்லை, ஆட்சி மாற்றம் தேவையில்லை, நல்லாட்சி நடக்கிறது, தொடரட்டும் கூறியிருப்பது, ஏதோ நடிகர் அஜித் சொன்னதாக நாங்கள் கருதவில்லை, ஒரு சமூகம் மற்றும் பகுதி மக்களில் நாட்டு நல விரும்பிகள்,அரசியலில் ஆர்வம் இல்லாத நல்ல உள்ளங்களை படைத்தவர்கள் இந்த கருத்தை சொல்லுகிறார்கள் என்றால் வருகிற முறையும் 7-வது முறையாக மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்று ஆட்சி அமைப்பார். திமுக வெற்றி வாக்குப்பதிவின்போதே உறுதி செய்யப்பட்டு விட்டது. திருவிடைமருதூர் தொகுதியில் முழு நிறைவாக வாக்குப்பதிவு நடப்பதற்கு திமுக கூட்டணி களப்பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்குப்பதிவிற்கு 2 மணி நேரம் கூடுதலாக ஒதுக்கி தர வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார் என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் விதிமுறைகளை நன்றாக புரிந்தவர்கள், அறிந்தவர்கள் அதற்கு கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும். காலையில் நினைத்து மதியம் சொல்லி மாலையில் மாற்றுவது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் இல்லை.

அரசியல் விபரம் புரிந்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை புரிந்தவர்கள், கடந்த கால தேர்தல் நெறிமுறைகளை தெரிந்தவர்கள், இப்படி சொல்வதற்கு வாய்ப்பில்லை. மாலை 6 மணிக்கு மேல் வாக்களிப்பவர்களுக்கு டோக்கன் வழங்கி தேர்தல் ஆணையம் வாக்களிப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் நெறிமுறையை நன்றாக பார்த்து அறிந்து புரிந்து நடிகர் விஜய் அந்தக் கோரிக்கை வைத்தால் நியாயமாக இருக்கும் என்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *