சென்னையை சேர்ந்த தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட் கண்காட்சி நிறுவனம் நடத்தும் ஹோம் லிங்க்ஸ் பொருட்காட்சி கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல் அமீன் பள்ளி மைதானத்தில் திறப்பு விழா நடைப்பெற்றது.

விழாவிற்கு ஹோம்லிங்ஸ் நிர்வாக இயக்குனர் அப்பாஸ் ஹக்கீம் தலைமை தாங்கினார். தொழில் அதிபர் சதகத்துல்லாஹ் முன்னிலை வகித்தார் பொருட்காட்சியை சீமாட்டி சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.பசீர் அஹமது திறந்து வைத்தார்.

பொருட்காட்சியில் முதல் முறையாக சாரல் நீர்வீழ்ச்சி அமைப்புடன் பொருட்காட்சி தொடங்கி உள்ளது வீட்டு உபயோகம் தேவையான பொருட்கள், பெண்களுக்கான அணிகலன்கள் உள்ளடங்கிய கடைகளும், குழந்தைகள் பெரியோர்கள் மகிழ ராட்டினங்கள், கரும்புச்சாறு, ஜிகர்தண்டா, ஊட்டி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, பாணி பூரி உள்ளிட்ட உணவுக் கடைகளும் அமைந்துள்ளன. இந்த பொருட்காட்சியானது கடந்த 23 ஆண்டுகளாக கும்பகோணம் சுற்றுவட்டாரம் மற்றும் டெல்டா மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவில் ஹோம்லிங்ஸ் நிர்வாகி சாதிக் பாட்சா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *