புதுவை மாநிலம் தேசிய விருது பெற்ற மோகன்தாஸ் அவர்களின் கைவினைப் பொருட்கள் விற்பனையக தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரியில் “கைவினை – கையால் செய்யப்பட்ட மகிழ்ச்சி” என்ற பெயரில் கைவினைப் பொருட்கள் விற்பனையகத்தின் தொடக்க விழா புதுச்சேரி மாநிலம் ஈஸ்வரன் கோவில் தெருவில் நேற்று மாலை 5 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி இந்திய கைவினைத்திறனின் காலத்தால் அழியாத கலைத்திறனைக் கொண்டாடும் நோக்கில், பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது. கமலாதேவி சட்டோபாத்யாயின் தெய்வீக ஆசீர்வாதங்களை முன்னிட்டு, பாரம்பரிய கைவினைஞர்களின் பங்களிப்பை முன்னிறுத்தும் வகையில் விழா நடைபெற்றது.
இவ்விழாவை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. K. லட்சுமிநாராயணன் அவர்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு திரு. கே. பஞ்சாக்ஷரம் (செயலாளர், சீபா) தலைமை தாங்கினார். முதல் விற்பனையை கலைமாமணி திருமதி Saroja Thirunavu Karasu அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த விற்பனையகத்தை புதுச்சேரி கைவினைக் கழகத்தின் நிறுவனர்-செயலர் திருமதி சித்தாரா நாயர் கெர்டெஸ் அவர்கள் முன்னெடுத்து நடத்தி வருகிறார். “கைவினைப் பொருட்களின் ராணி” என்ற கருத்தை அறிமுகப்படுத்தும் விதமாக இந்த முயற்சி அமைந்துள்ளது.
நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ, ஷில்ப் குரு வி.கே. முனுசாமி, கலைமாமணி ஆர். ராஜுசில்பி, ஏ. சேகர், கலைமாமணி ஏ. ராமகிருஷ்ணன், கலைமாமணி எஸ். மாசிலாமணி, மூர்த்தி, கே. வெங்கடேசன் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில விருது பெற்ற கலைஞர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் லயன்ஸ் கிளப் சார்பில் பிஎம்ஜேஎஃப் லயன் எஸ். செல்வகாந்தி அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த தொடக்க விழா கைவினைத் துறையின் வளர்ச்சிக்கும், பாரம்பரிய கலைஞர்களின் திறமையை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவும் முக்கியமான படியாக அமைந்தது.
இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி வருகை தந்த அனைவரையும் தேசிய விருத்தாளர் திரு மோகன் தாஸ் வரவேற்றனர்.