புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், கார்கில் வெற்றி தின அரசு விழா நாளை (ஜூலை 26) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு புதுச்சேரி கடற்கரைச் சாலையில், பிரெஞ்சு தூதரகம் எதிரில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் நடைபெறுகிறது.
விழாவில் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் மலர் வளையம் வைத்து கார்கில் போரில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
மேலும், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அழைப்பாளர்கள் காலை 8.30 மணிக்குள் தங்களுக்கான இருக்கைகளில் அமருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது