பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே பசுபதி கோவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் ஸ்ரீ மனோன்மணி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்….
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் குடமுருட்டி ஆற்றங்கரையில் எழுந்தருளிள்ள ஸ்ரீ மனோன்மணி அம்மன் ஆலய கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைப்பெற்று யாகசாலையில் 4 கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து மேள தாள வாத்தியங்கள், முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீர் கலசங்களை சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர் அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதன்முறையாக தாமரை வடிவம் கொண்ட ஸ்ரீ மனோன்மணி அம்மன் ஆலய கோவிலின் ராஜகோபுரத்தின் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் ஏற்பாடுகளை பசுபதி கோவில் கிராமவாசிகள்,விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.