காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியில் கடந்த இரண்டு வருடமாக திண்டிவனத்தை சேர்ந்த மோகன்ராஜ் கவிதா தம்பதியினர்.
வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
மோகன்ராஜ் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 வயதில் தர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் திடீரென காணாத சூழலில் வீட்டின் பின்புறம் திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு தண்டலம் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் தர்ஷன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
உடனே தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 வயது சிறுவன் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது