கருங்கண்ணி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தீமிதி & செடில் உற்சவம் சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்றது!
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் திருக்குவளை அருகே கருங்கன்னி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா தீமிதி மற்றும் செடில்உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது, முன்னதாக சித்திரை மாதம் 6ஆம் தேதி 19. O4.2026 அன்று பத்ரகாளியம்மன் கருமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூச்சொரிதல் நிகழ்வுடன் தொடங்கியது ,
விரதமிருந்த பக்தர்கள் பெருமாள் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து 500க்கும் மேற்ப்பட்ட காப்புகட்டிய பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர், மேலும் முதுகிலும் நாக்கிலும் அலகிட்டு பக்தி பரவசத்துடன் தீக்குழில் இறங்கியது மற்றும் இரத காவடி, மயில் காவடி,சுற்றியுள்ள பொது மக்களும் குழந்தைகள் மற்றும் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கண்டுக்களித்தனர்.
இதனை தொடர்ந்து குழந்தைகளை தூக்கி செடிலில் மரத்தில் சுற்றி வந்தனர் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது,
மகா தீபாரத்னை காண்பிக்கப்பட்டது, இந்த நிகழ்வில் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் வான வேடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.