விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயணப்பெருமாள், ஸ்ரீ பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயிலின் பனிரெண்டாம் ஆண்டு பிரதிஷ்டை வார்ஷீக கும்பாபிஷேகம் (வைகானஸ ஆகம முறையில்) மிகுந்த ஆன்மிக விமர்சையாக நடைபெற்றது.

பராபவ வருடம் சித்திரை மாதம் 15-ம் தேதி (28-04-2026, செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணிக்கு யஜமானர் சங்கல்பம், அனுக்கை, புண்யாஹம், அக்னி பிரதிஷ்டை, மகா சாந்தி, கலச ஸ்தாபனம், மகா சாந்தி ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி சாற்றுமுறை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சித்திரை மாதம் 16-ம் தேதி (29-04-2026, புதன்கிழமை) ஹஸ்த நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 6.00 மணிக்கு சங்கல்பம், புண்யாஹம், மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.00 மணிக்கு பூர்ணாஹுதி, யாத்ராதானம், மகா சாந்தி, கடம் புறப்பாடு, திருமஞ்சனம் (அபிஷேகம்), விசோர்சணம் சாற்றுமுறை மற்றும் தீர்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றது.

மாலை 4.00 மணிக்கு மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெற்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு அருளைப் பெற்றனர்.

இவ்விழா மிகுந்த சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் திரு. M. ஏழுமலை கவுண்டர் அவர்கள் செய்திருந்தார். ஆலய அர்ச்சகர் திரு. K. லக்ஷ்மி நாராயண பட்டாச்சார் அவர்கள் மற்றும் பெரம்பை கிராம மக்கள் அனைவரும் இணைந்து விழாவை சிறப்பாக நடத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *