மதுரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம்

​அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள சுனில் மைத்ரா அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னத்துரை எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.


​இந்த கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளரர் வி.சிவதாசன் எம்.பி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் (முன்னாள்எம்.எல்.ஏ)மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர்பழனிச்சாமி,மத்திய செயற்குழு உறுப்பினர் பூங்கோதைமாநில செயலாளர் மாரியப்பன்,ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மதுரை மாவட்ட தலைவர் காசி, மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன்மாவட்ட துணை செயலாளர் மாயாண்டி, மாவட்ட குழு உறுப்பினர் பிரேமலதா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *