மலர்கொடிபுதுச்சேரி செய்தியாளர்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், அருள்மிகு ஏழை மாரியம்மன் கோவில் சார்பாக எதிர்மறையாதை செலுத்தப்பட்டு, பக்தி மிகுந்த தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இந்த திருவிழா நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பெரம்பை கிராமவாசிகள் சிறப்பாக மேற்கொண்டனர்.