மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர்
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா மங்களகரமாக நடைபெற்றது.

பராபவ வருடம் சித்திரை மாதம் 18-ம் தேதி (01-05-2026) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில், ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோவிலில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு, ஸ்ரீ பூரணி பொக்கிலை சமேத ஸ்ரீ ஜயனாரப்பன் ஆலயத்திற்குச் சென்று சிறப்பு தீபாராதனை செய்தனர்.
அதன் பின்னர் 108 பால்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து, ஸ்ரீ ஏழை மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் திருவருளைப் பெற்றனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் அதனை பெற்றுச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு மாரியம்மன் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. இந்த விழாவை பெரம்பை கிராம மக்கள் மிகுந்த பக்தி உணர்வுடன் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.