எ.பி.பிரபாகரன்
பெரம்பலூர்
செய்தியாளர்.
பெரம்பலூரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் தலைமையில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர். மே.01. எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடிப் பெற்ற மகத்தான வெற்றியை இந்த மே தினம் நமக்கு நினைவுபடுத்துகிறது.
உழைக்கும் வர்க்கத்தின் ஈடு இணையற்ற முயற்சியைப் போற்றுவதும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அவர்களைப் பாதுகாப்பதுமே இத்தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும்.
எட்டு மணி நேர வேலை கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களே மே தினம் உருவாவதற்கு நேரடி காரணமாயின.
தொழிலாளி வர்க்கத்தை ஒப்பந்த முறையின்கீழ் கொண்டு வருதல், தொழிற்சங்க உரிமைகளைப் பறித்தல் மற்றும் பணி நேரத்தை நீட்டித்தல் உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தற்போதைய ஆளும் அரசு மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
நமது நாட்டின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் தொழிலாளர்களின் கடும் உழைப்பே அஸ்திவாரம். நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் எண்ணற்ற தொழிலாளர்களின் வியர்வையும், பங்களிப்பும் அடங்கியுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.
அந்த வகையில், அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி யார் ஆணைக்கிணங்க உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அருணாச்சலம் முன்னிலையில் பெரம்பலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் அண்ணா தொழிற்சங்க கொடியினை ஏற்றி இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநில, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.