கோவை நாட்டிய கலாசேத்ரா சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது
இந்திய மற்றும் தமிழகத்தில் பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும் பரத கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் பரதநாட்டிய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது…
கோவை நாட்டிய கலாசேத்ரா சார்பாக பேரூர் ஆதீன மடத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க விழா, கோவை நாட்டிய கலாஷேத்ரா நிறுவனர் ஏலியா நிஷா தலைமையில் நடைபெற்றது இதில் பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் வாழ்த்துரைகளோடு விழா துவங்கப்பட்டது..
சாதனை நிகழ்வை ஆனைமலை சத்யேந்திர பீடம் மூலிகை சித்தர் துவக்கி வைத்தார்..
இதில்,கோவை நாட்டிய கலாசேத்ரா மாணவிகள் சுமார் நான்கு வயது முதலான பள்ளி பள்ளி கல்லூரி,,மாணவிகள் 101 பேர் இணைந்து தலையில் செம்பு கலசம் வைத்து, பானை மீது நின்று தொடர்ந்து 30 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்தனர் இது குறித்து கோவை நாட்டிய கலாஷேத்ரா நிறுவனர் ஏலியா நிஷா செய்தியாளர்களிடம் கூறுகையில்,இந்த சாதனை முயற்சிக்காக தொடர்ந்து சுமார் ஆறு மாதகாலம் பயிற்சி எடுத்துள்ளதாகவும்,தற்போது மாறி வரும் டிஜிட்டல் உலகில் பரதகலை கற்பதன் அவசியம் மற்றும் பரத நாட்டியம் ஆடுவதால் ஏற்படும் உடல் மற்றும் மன ஆரோக்கியம. குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சாதனையை மாணவிகள் செய்துள்ளதாக தெரிவித்தார்..
30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள்,புஷ்பாஞ்சலி,,மற்றும் பாரதியார் ,செம்மொழி ஆகிய பாடல்களுக்கு எல்.கே.ஜி.துவங்கி பள்ளி கல்லூரி வரை பயிலும் மாணவிகள் 101 பேர் இணைந்து, களிமண் பானைகள் மீது நின்றபடி சமநிலையோடு நின்று தாளத்திற்கு ஏற்ப ஆடியதை பார்வையாளர்கள்,பெற்றோர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்…
தொடர்ந்து அரை மணி நேரம் பானை மீது நின்று தலையில் கலசத்துடன் பரதம் ஆடிய இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..
சாதனை மாணவர்களுக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் சுரேஷ் உலக சாதனை பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்..