“கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் மாடிமணி இல்லத்தில்சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திப்பிராஜபுரம் கீழ அக்ராரம் உள்ள மாடிமணி கிரஹத்தில் சித்திரகுப்த பூஜை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அவல் பொரி கடலை வெல்லம் கொய்யா வாழை இளநீர் உள்ளிட்ட பழங்கள், பல்வேறு காய்கறிகள் சித்திரகுப்தருக்கு படைத்து, வாழைமரத்தில் பந்தல் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த பூஜையில் கலந்து கொள்வோருக்கு குழந்தைப்பேறு, ஆயுள் விருத்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். கடந்த பல ஆண்டுகளாக மாடிமணி குருக்கள் நடத்திவருகிறார். பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *