கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 (CSI Edu Connect) எனும் மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கணிணி துறை மட்டுமின்றி பிற துறைகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேச்சு
கோவையில் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து, .சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 எனும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் சி.எஸ்.ஐ.ஆல் சோல்ஸ் ஆலய வளாகத்தில் நடைபெற்றது..
முன்னதாக இதன் துவக்க விழாவில், கல்வி வழிகாட்டியின் ஒருங்கிணைப்பாளரும்,ஊட்டி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியின் இயக்குனருமான அருமை ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்..
துவக்க விழாவில் தலைமை உரையாற்றிய சி.எஸ்.ஐ. கோவை திருமண்டல பேராயர் பிரின்ஸ் கால்வின்,கல்வி சேவையாற்றுவதில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்..
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதியான அப்துல் கலாம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தனது பள்ளி பருவத்தை கிறிஸ்தவ பள்ளியில் பயின்றதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டி நிகழ்ச்சியாக நடைபெற்ற இதில், இதில்,கோயம்புத்தூர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் சி.எஸ்.ஐ கல்வி நிறுவனங்கள், கோவை,, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல கல்லூரி நிறுவனங்கள் பங்கு பெற்றன..
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில்,கணிணி துறையில் தற்போதைய மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதை சுட்டி காட்டிய அவர்,பிற துறைகளிலும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், எனவே அது போன்ற துறைகளையும் மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும் என தெரிவித்தார்..
நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ.கோவை திருமண்டல உப தலைவர் ஆயர் டேவிட் பர்னபாஸ் ,பொருளாளர் அமிர்தம் ,உட்பட ஆயர்கள்,திருமண்டல நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர் முன்னதாக கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடர்பாக அமைக்கப்பட்ட அரங்குகளை விருந்தினர்கள் பார்வையிட்டனர்..
மாணவர்களின் எதிர்கால கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பெற்றோர்கற் திரளாக கலந்து கொண்டனர்..