லாரியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெரால்ட் என்பவர் டிப்பர் லாரி சொந்தமாக வைத்துள்ளார். இந்த டிப்பர் லாரிகள் நிலக்கரி ஏற்றப்பட்டு மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணியை ஜெரால்டு டிப்பர் லாரி மூலம் செய்து வருகிறார். இந்த நிலையில் லாரி டிரைவராக செல்வம் என்பவர் இருந்துள்ளார். சில நிறுவனத்தில் டிப்பர் லாரி டிரைவர் செல்வம் பிரச்சனையை உண்டு பண்ணியதால் லாரி டிரைவர் பணியிலிருந்து செல்வத்தை லாரி உரிமையாளர் ஜெரால்ட் நிறுத்தி உள்ளார்.
அதன் பிறகு ஜெரால்ட் தன்னுடைய டிப்பர் லாரிக்கு வேறு டிரைவர்கள் மூலம் நிலக்கரியை குடோன்களில் இருந்து ஏற்றி மின்சார உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணி செய்து வந்துள்ளனர் இந்த நிலையில் பணியில் இருந்து நீக்கப்பட்ட டிரைவர்செல்வம் டிப்பர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்த நபர்களை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்
நேற்றைய தினம் நிலக்கரி ஏற்றுக்கொண்டு வந்த டிப்பர் லாரியை செல்வம் திருச்செந்தூர் ரவுண்டானா அருகில் வைத்து லாரியை மறித்து டிரைவரை மிரட்டி உள்ளார். டிரைவர் லாரி அங்கே நிறுத்திவிட்டு சென்றுவிட்டார் அதன் பிறகு வேறு டிரைவர் மூலம் ஜெரால்டு டிப்பர் லாரியை நிலக்கரியை இறக்கிவிட்டு பைபாஸ் ரோட்டில் உள்ள மரத்தடி குடோனில் லாரியை நிறுத்தி உள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு குடோனில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை மர்ம நபர்கள் லாரி கண்ணாடியை உடைத்து லாரினயயும் சேதப்படுத்தி உள்ளனர். சனிக்கிழமை லாரி உரிமையாளர் ஜெரால்ட் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு சென்று பார்த்த போது லாரியின் முன்பக்க கண்ணாடி இரண்டு புறமும் உடைக்கப்பட்டிருந்தது அதுபோல லாரியில் சைடில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்ணாடியும் உடைக்கப்பட்டு லாரியும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக லாரி உரிமையாளர் ஜெரால்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது பற்றி ஜெரால்டு கூறுகையில் எனது லாரியில் டிரைவராக பணிபுரிந்த செல்வம் பல்வேறு கம்பெனிகளில் பிரச்சனையில் ஈடுபட்டதால் என்னுடைய லாரி டிரைவர் பணியில் இருந்து நீக்கிவிட்டு அதன் பின்பு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார் ஆகையால் காவல்துறையினர் உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று ஜெரால்டு கூறினார்.