தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே முத்தனாம்பட்டியைச் சேர்ந்த முருகன் (45), த/பெ வடுகன், தனது வீட்டில் நடைபெறவிருந்த திருமண விழாவிற்காக குண்டடத்திலிருந்து இட்லி எடுத்துச் செல்லும் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் முருகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கனவே மற்றொரு விபத்தில் சேதமடைந்திருந்த மின் கம்பம், இந்த மோதலால் முறிந்து கம்பிகள் வலுவில் தொங்கிய நிலையில் இருந்தது.

இதனால் குண்டடம் – பெரியப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த குண்டடம் மின்வாரியத்தினர் மற்றும் குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *