நீலகிரி 04.05.2026
தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 110க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் முன்னிலை வகித்து வருவதால் உதகையில் அக்கட்சியின் மாவட்ட ஆலோசகர் டேனி தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 234 சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் வாக்கு என்னும் பணி இன்று காலை எட்டு மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுதும் தமிழக வெற்றி கழகம் 110 இடங்களுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அக்கட்சியின் மாவட்ட ஆலோசகர் ஊட்டி டேனி தலைமையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.