கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6ம் நாளன்று வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் கோலத் தில் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் சுந்த ரராஜ பெருமாள் எழுந்தருளினார்.


அதை தொடர்ந்து கருட வாகனத் தில் புறப்பட்டு, பல்வேறு மண்டகப்படி களில் பிரசன்னமாகி வண்டியூர் வைகை ஆற் றில் உள்ள தேனூர் மண் டபத்துக்கு பிற்பகல் 1.15 மணியளவில் எழுந்தரு ளினார். அங்கு திருமஞ்சனமாகி மாலை 3.45 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் மண்டகப்படி முன்பு மண்னம் அளிக் கும் நிகழ்வுக்காக, கோயில் இணை ஆணையர் ஹரிஹரன் ஏற்பாட்டில் புதியதாக தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதன் கரையில் மண்டூக முனிவர் சிலையும், அங்கு உயிருடன் நாரையும் கட்டி வைக்கப்பட்டிருந்தன.


அப்போது (தவளையாக) மாறிய மண்டூகமுனிவரை நாரைகள் கொத்தி தின்று விடாமல் சுந்தரராஜ பெருமாள் திருவிளையாடல் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்பட்டது.
மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அப்போது கட்டியிருந்த நாரை அவிழ்த்து விடப் பட்டது.

அந்த நாரை தென்மேற்குத் திசை நோக்கி பறந்து வைகை ஆற்று தண்ணீரை தொட்டுச் சென்ற தால், விவசாயம் செழிக்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பின்னர், சுந்தரராஜ பெருமாள் மண்டகப்ப டியை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது உயர் நீதிமன்ற உத் தரவுப்படி தேனூர் மண் டபத்தைச் சேர்ந்த கரைக்காரர் களுக்கு கோயில் நிர்வாகம் சார் பில் மரியாதை செலுத் தப்பட்டது. மாலை 4.52 மணிக்கு மண் டகப்படியிலிருந்து புறப்பட்டு அனுமார்பட்டி ஆஞ்ச நேயர் கோயிலுக்குச் சென்றார். அங்கு அங்கப் பிரதட்சணம் நடைபெற் றது. வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படி களில் எழுந் தருளியபடி ராமராயர் மண்டபம் சென்றார்.


இரவு 10 மணிக்கு ஆழ்வார் பகுதியில் உள்ள ராம ராயர் மண்டகப்படியில் விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது. ராமராயர் மண்டகப்படியிலிருந்து பிற்ப கல் 2.30 மணியளவில் அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். அப்போது வைகைக் கரையின் அக்கரை யில் சிம்மக்கல் படித்துறையில் அழகரின் சடாரிக்கு பூஜை நடைபெறுகிறது.

திருமலைராயர் மே 4ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்ட பத்திலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் பூப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். கருப்பணசாமி கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மலைக்கு திரும்புகிறார். மே 5ம் தேதி காலை 10.40 மணி யளவில் கோயிலை அடை கிறார்.
மே 6ல் உற்சவ சாந்தியுடன் விழாநிறைவு பெறுகிறது.


விழாவுக்கான ஏற்பாடு களை கோயில் இணை ஆணையர் ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *