மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய ஆண்டுத் திருவி ழாவையொட்டி, அலங்காரத் தேர் பவனி நடைபெற்றது.

மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத் திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி – யது. விழாவையொட்டி, தினமும் மாலை யில் ஜெபமாலை வழிபாடும், திருப்பலியும் -நடைபெற்றன.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அலங் காரத் தேர் பவனி நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் ஆனந்தம் திருப்பலியை நிறைவேற்றி, புனித வளனாரின் திருச்சொரூபத்துடன் கூடிய மின் அலங்காரத் தேர் பவனியைத் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, பாரம்பரியமான பாதைக ளில் வலம் வந்த தேர் மீண்டும் ஆலயத்தை அடைந்தது.


புனித வளனார் தொழிலாளர் களின் பாதுகாவலர் என்ற வகையில், திருச்சி குருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த அருள்தந்தை அருள்ஜோசப் தொழிலாளர் தின சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கினார்.

மாலை 6 மணிக்கு திருவிழா நிறைவு நாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு,கொடி இறக்கப்பட்டது விழாவிறாகான ஏற்பாடுகளை பங்குத் தந்தை ஜோசப், உதவி பங்குத் தந்தை ராஜா ஆகியோர் தலைமையில் பங்கு பேரவையினர், அன்பியங்களை சேர்ந்தவர்கள் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *