தமிழக வெற்றி கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று வெற்றி நடை போட்டு வரும் வேளையில், அந்த வெற்றியை ஒரு வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் கோவையைச் சேர்ந்த பிரபல குறுந்தொழில் கலைஞர் யு.எம்.டி. ராஜா. கோவையின் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இவர், நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வெற்றியைப் பாராட்டும் விதமாக ஒரு சிறப்புப் பட்டத்தை உருவாக்கி ஆகாயத்தில் பறக்கவிட்டார்.
அந்தப் பட்டத்தில் “தமிழகத்தில் வெற்றி கழகம் வின்னிங் விஜய்” என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தில் வெற்றிக்கொடி கட்டிப் பறக்கட்டும் என்று வாழ்த்தியதோடு, ஆகாயத்தில் காத்தாடி மூலம் விசிலடித்து தனது மகிழ்ச்சியையும், நடிகர் விஜய் அவர்களுக்கான வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார். இவரது இந்த நூதனமான கொண்டாட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.