மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கோயிலை அடைகிறார். நாளை உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.27-ல் தொடங்கியது. மண்டுக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க சுந்தரராஜப் பெருமான். கள்ளழகர் திருக்கோலத்தில் ஏப்29 ல் அழகர்மலையிலிருந்து மதுரைக்கு புறப்பட்டார். ஏப்.30-ல் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. மே 1-ம் தேதி அதிகாலை 5.48 மணிக்கு பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் தங்கக் குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார்.


6-ம் நாள் மே 2-ல் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். அன்றிரவு தசாவதாரம் நடைபெற்றது. 7-ம் நாளான மே 3-ல் ராமராயர் மண்டபத்திலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக் கோலத்தில் எழுந்தருளி, தல்லா குளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்துக்கு இரவு 11 மணிக்கு சென்றார்.


எட்டாம் நாளன்று பூப்பல்லக்கில் கன்னழகர் எழுந் தருளினார். பின்னர் கருப்பணசாமி கோயிலில் வையாளியாகி தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுத்தருளி அழகர்மலைக்கு திரும்பினார் ரிசர்வ்லைன், புதூர், சர்வேயர் காலனி வழியாக பல்வேறு மண்டகப்படிகளில்எழுந்தருளி இருப்பிடம் நோக்கிச் சென்றார். இன்று (மே 5) அழகர்கோவில் சென்று இருப்பிடம் சேர்கிறார். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று திருஷ்டி கழித்து வரவேற்கின்றனர்.


மே 6-ல் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *