தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853
சென்னை அடுத்த தாம்பரத்தில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் சுட்டெரிக்கும் வெய்யிலின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மணிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு சுட்டெரிக்கும் வெய்யிலின் தாகம் தீர்க்க தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர்மோர், பழச்சாறு உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் முனாஃப் உட்பட மமக நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.