திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கோடைக்காலத்தின் உச்சபட்ச வெயில் தாக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. ஆனால், (மே 6) மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென பரவலான மழை பெய்தது.கத்திரி வெயில் ஆரம்பமாகி 2-வது நாளான , காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திருவாரூர், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்தது. இந்த கோடை மழை, வெயிலின் தாக்கத்தைத் தணித்து, மக்களுக்கு பெரும் குளிர்ச்சியை அளித்துள்ளது.

இருப்பினும், இந்த மழைக்கு பிறகும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அக்னி நட்சத்திர காலத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த திடீர் மழையால், பல நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் குறைந்து, இதமான சூழல் நிலவுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *