கொடைக்கானல்

கொடைக்கானலில் மறைந்த புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சுமார் 6000 மக்களுக்கு வேஷ்டி ,துண்டு, சேலைகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே சத்ய சாய் பாபா ஆசிரமம் அமைந்துள்ளது, இந்த ஆசிரமத்தில் மறைந்த சத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மாவின் 54-வது நினைவு தினமான இன்று, மறைந்த புட்டபர்த்தி சத்ய சாய்பாபவிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும்,ஈஸ்வரம்மாவிற்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஈஸ்வரம்மாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலைகள்,குழந்தைகளுக்கு பேக்குகள்,விளையாட்டு பொருட்கள், இனிப்புகள், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது,

இந்த பிரசாதங்களை வாங்குவதற்கு காலை முதலே சுமார் 6000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆண்,பெண் என நீண்ட வரிசையில் சுமார் 2 கிமீ தூரம் காத்திருந்து பிரசாதங்களை வங்கி சென்றனர் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் ஏரிச்சாலை பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் சத்ய சாய் சேவா சங்க நிர்வாகத்தினர் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *