மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ் வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான கடும் வெப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளி, சனி ஆகிய இருநாள்களும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு, மீண்டும் கடும் வெப்பம் நிலவியது.
இந்த நிலையில், தெற்கு மத்திய பிரதேசத்தின் மையப் பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண் டல தாழ்வுப் பாதை நிலவுவதால், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ் வாய்க்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு பலத்த இடி, மின்னலு டன் மழை பெய்தது. திருப்பரங்குன்றம், திருநகர், தோப்பூர், கப்ப லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்ததால் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், வெறிச்சோடிக் காணப்பட்டது.. மதுரை தல்லாகுளம், கோ. புதூர், அண்ணாநகர், வண்டியூர், பழங்காநத்தம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 11.30 மணிக்குப் பிறகும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு 12.30 மணிக்கு மேலாகவும் நீடித்தது.