மீண்டும் மக்கள் பணி மேயர் ஜெகன்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து 45 நாட்களுக்கு மேலாக தேர்தல் பணி வேலைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட உள்ளது. தேர்தல் விதிமுறைகள் முடிந்தவுடன் இன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதன் அடிப்படையில் நாளை முதல் மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட மேயர் ஜெகன் முடிவு. தற்போது கோடை காலம் என்பதால் தூத்துக்குடி மாநகர் பகுதிக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் எந்த விதமான தங்கு தடை இன்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளார்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலை பணிகள் அப்படியே பல பணிகள் நின்று உள்ளது உடனடியாக அந்த சாலை பணிகளை துவக்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளார்.
அதுபோல உலகத்தரம் வாய்ந்த வகையில் அமைக்கப்படுகின்ற நீச்சல் குளம் பணிகளை பார்வையிட்டு விரைவான வகைகள் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளார். அதுபோல தூத்துக்குடி துறைமுகம் மாநகராட்சி நிர்வாகமும் புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் பல்வேறு நவீன வசதிகளுடன் உலக தரத்தில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது
அந்தப் பணிகளையும் மேயர் ஜெகன் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த உள்ளார் மொத்தத்தில் இரண்டு மாத காலம் மக்கள் பணியில் தேர்தல் விதிமுறை காரணமாக ஈடுபடாமல் இருந்த மேயர் ஜெகன் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் மக்கள் பணியில் ஈடுபட உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கு கொடுத்த பணியை 5 வருட காலம் மக்களுக்காக உழைத்து மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எனக்கு வாய்ப்பு வழங்கிய திமுக தலைவருக்கும் திமுக விற்கும் பெருமை சேர்க்கும் வகையில் எனது பணிகள் இருக்கும் என்று மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார்.