மக்கள் சக்தி இயக்கம் சார்பில் (58 ஆவது)
மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப் புகள் தானமாக வழங்கி ஐந்து பேருக்கு வாழ்வு அளித்த குடும்பத்தினரை பாராட்டினர்.

திருச்சி மாவட்டம் மணப் பாறை வேம்பனூரை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 22) பனைமரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இது குறித்து குடும்பத்தினரிடம் மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க குடும்பத்தினர் முன் வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழி காட்டுதலின்படி அவருடைய உறுப்புகளான கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் தானமாக பெறப்பட்டது.

இந்த உறுப்புகள் உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, கல்லீரல் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், ஒரு சிறு நீரகம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், மற்றொரு சிறுநீரகம் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கும், கண்கள் மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயனாளிக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயனாளிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

உடல் உறுப்புதானம் வழங்கிய கொடையாளிக்கு மரியாதை செலுத்தி
கொடை அளிக்க ஒப்புதல் அளித்த குடும்பத்தினர் அவரது தாயார் மணிப்பிள்ளை, தந்தை பொன்னுசாமி, தங்கை கவிதா, தம்பி நீலேசு ஈடு கட்ட முடியா ஈகைச் செயலை பாராட்டி மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே..சி.நீலமேகம், மாநில துணைத்தலைவர் வெ.இரா.சந்திரசேகர், மாநில துணைச் செயலாளர் இரா.இளங்கோ, திருக்குறள் பயிற்றகம் நிறுவனர் நாவை.சிவம், ஒருங்கிணைப்பாளர் சிவ.தளபதி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பெ.விஜயகுமார் உள்ளிட்டோர்,

கொடையளித்த குடும்பத்தினரை பாராட்டி பயனாடை அனிவித்து திருக்குறள் மற்றும் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி நூலுடன் சான்றிதழ் வழங்கினர். தமிழ்நாட்டில் உடல் உறுப்புகளை கொடை அளிக்க ஒப்புதல் அளித்த ஈகை குணம் கொண்ட ஐம்பத்தெட்டாவது குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கம் சிறப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *