தொடர்ந்து மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி. 569 மார்க் எடுத்து மாணவி முதலிடம்.
தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு 9ஆம் இடத்தில் இடம் பெற்று இருந்தது இந்த ஆண்டு ஆறாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 12-ம் வகுப்பு வரை உள்ள ஒரே பள்ளி சாமுவேல் புரம் மாநகராட்சி பள்ளி தான். இந்தப் பள்ளியில் 902 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்
இந்தப் பள்ளி தொடர்ந்து ஆறு வருடங்களாக 12 ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று வருகிறது அதுபோல இந்த ஆண்டும் பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாநகராட்சி பள்ளி அபார சாதனை படைத்துள்ளது அதுபோல இந்த பள்ளியில் படிக்கும் மாணவி டேனிகா மேத்யூ என்ற மாணவி 600க்கு 569 மார்க் எடுத்து பள்ளிக்கும் மாநகராட்சிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
569 மார்க் எடுத்த மாணவி டேனிகா மேத்யூ கூறுகையில் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் தொடர்ந்து வகுப்புகளில் பாடம் நடத்தி வந்தார்கள் அதன் அடிப்படையில் நான் இன்று 600 க்கு 569 மார்க் எடுத்து உள்ளேன் வருங்காலத்தில் நான் மருத்துவ படிப்பு படிக்க விரும்புகிறேன் என்று மாணவி கூறினார்.
தலைமை ஆசிரியர் ரூபினா ரொட்ரிகோ கூறுகையில் தூத்துக்குடி மாவட்டத்திலேயே மாநகராட்சி பள்ளி 12ஆம் வகுப்பு வரை உள்ளது சாமுவேல் புரத்தில் தான் உள்ளது இந்தப் பள்ளி தொடர்ந்து ஆறு வருட காலமாக 12-ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்று வருகிறது இதற்கு மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் முழு உறுதுணையாகவே உள்ளனர்
பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது நவீன லேப் வசதி. கணினி வசதி. லைப்ரரி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்று தலைமை ஆசிரியர் கூறினார். சாமுவேல் புரம் மாநகராட்சி பள்ளியில் அனைத்து வசதிகளும் மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது மூன்று மாடி கட்டிடம் தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் இந்த மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆறு வருட காலமாக இந்த மாநகராட்சி பள்ளி 100 சதவீதம் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்று வருவது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஒற்றுமையவே காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுபோல இந்த ஆண்டுக்கான மாணவ மாணவியர் சேர்க்கை தற்போது தொடர்ந்து மாணவரா மாணவியில் சேர்க்க நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.