மதுரை, அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை பெய்த பலத்த மழையால், பெரும்பாலான பகு திகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடுமையான வெப்பம் நிலவி யது. இதனிடையே முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் மக்கள் யாரும் வர வேண்டாம். வெப் பத்தின் தாக்கத்தை குறைக்கும் வகை யில், அதிகளவில் குடிநீர் அருந்த வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறி வுறுத்தல்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தன.
மேலும், கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது.
இந்நிலையில் தெற்குஒடிசாமுதல் மன்னார் வளைகுடா, தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் வழியாக வளிமண் டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய் யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் மாலை, இரவு, நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீர் மதுரையைப் பொறுத்தவரை தினமும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில் அதிகாலை 2 மணிக் குப் பிறகு இடி மின்னல் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால், மதுரை மாநகர பகுதி களான பெரியார் பேருந்து நிலையம் ரயில் நிலையம், மாசி வீதிகள், சிம்மக்கல், கீழ ஆவணி மூல வீதிகள், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், தமுக்கம், தல்லாகுளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், கே.கே. நகர், மாவட்ட நீதி மன்ற வளாகப் பகுதிகள், மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதிகள், சர்வேயர் காலனி, சம்பக்குளம், பந்தயச் சாலை கள், அழகர் கோவில் சாலை, புது நத் தம் சாலை, டி.ஆர்.ஓ.காலனி ஆயுதப் படைக் குடியிருப்பு, விஸ்வ நாதபுரம், நாராயணபுரம், கோவில் பாப்பாகுடி விளாங்குடி. பி.பி.குளம், உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போலத் தேங்கியது. மழைநீர் வடிகால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால் பெரும்பாலான இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாமல் சாலைகளில் தேங்கி நின்றன.
இதன்காரணமாக அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் நடந்து சென்ற பொதுமக்களும் மிகவும் அவ திக்குள்ளாகினர். தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ள தாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித் தனர்.
குப்பைகள் தேக்கம்: சித்திரைத் திருவிழா, தேர்தல் காலப் பணிகள் உள்ளீட்ட பல்வேறு காரணங்களால் மதுரை மாநகராட்சி தூய்மைப் பணி யாளர்கள் கடந்த சில நாட்களாக சரி வர பணிக்கு வரவில்லை. இதன்கார ணமாக, மதுரை மாநகராட்சி தெருக் களில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி யுள்ளன. சாலையின் முக்கியப் பகுதிக னில் உள்ள தொட்டிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்படாததால் துர்நாற் றம் வீசுகிறது.
மேலும், இந்தக் குப்பைகள் மழைநீர் வடிகால்களின் பாதையை அடைத்து விடுகின்றன. இதன்காரணமாக சாலை கனில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி யுள்ளது. வாகன ஓட்டிகள் பொதுமக் கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின் றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறிய தாவது: சிறு மழைக்கே மதுரை மாநக ரம் வெள்ளக்காடாக மாறி விடுகிறது. குறிப்பாக மக்கள் மட்டுமன்றி வாக னங்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் குளம் போலத் தண்ணீர் தேங்கி விடுகிறது.
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும், மதுரை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. குண்டும் குழி யுமான சாலைகளில் தண்ணீர் தேங்கு வதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக் குள்ளாகும் நிலை ஏற்படுகி றது. மதுரை மாநகரில் மழைநீர் வழித் தடங்ளைச் சீரமைக்க வேண்டும். இது விஷயத்தில் மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மதுரை மாவட்ட மழை அளவு (மி.மீ): மதுரை வடக்கு-36.5, நல்வாகு ளம்-26, பெரியபட்டி-33.2, விரகனூர்-22.2, சிட்டாம்பட்டி- 30. 2, சாத்தை யாறு அணை – 49, வாடிப்பட்டி- 15, மேட்டுப்பட்டி 40.2 ஆண்டிப்பட்டி-34.8, மதுரை விமான நிலையம்- 14.2. திருமங்கலம்- 10.2.