வடலூர், மே.9-
வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி மகள் மாலதி, (28). வானதிராயபுரம், பின்னாசிக்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதி பூவராகசாமி மற்றும், காயத்திரி ஆகியோர் மாலதிக்கு உறவினர் ஆகும். நேற்று முன்தினம் பூவராகசாமி தம்பதிக்கு சொந்தமான முந்திரி தோப்பில் மாலதி முந்திரிக்கொட்டை பொறுக்கினார்.

இதனால் தம்பதியர் மாலதியை ஆபாசமாக திட்டி, காலால் உதைத்தனர். இதில் காயமடைந்த மாலதி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து வடலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட கணவன் மனைவி மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *