மதுரை மாநகர் மற்றும் புறநகர் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பி.எம். ஸ்ரீ (PM SHRI) திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களால் அமல்படுத்தப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த பி.எம். ஸ்ரீ திட்டத்தை, தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்குள் அவசரமாக செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், புதிதாக அமையவிருக்கும் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இத்திட்டத்திற்கு உடனடி ஒப்புதல் வழங்குமாறு ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்
படுகிறது.

இதனை கண்டித்து, இத்திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் மதுரை குரு தியேட்டர் எதிரில், பெத்தானியாபுரத்தில் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக் குழுக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் டீலன் ஜெஸ்டின் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் சுதர்சனன் கண்டன உரையாற்றினர். நிறைவாக மாநகர் மாவட்ட செயலாளர் டேவிட் ராஜதுரை பேசினார். இதில் மாநில குழு உறுப்பினர் தீபலட்சுமி மற்றும் மாநகர், புறநகர் மாவட்டங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *