கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது.இத்தேர்வை பள்ளியைச் சேர்ந்த 328 மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய எல்லா மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும்
R. உபாஸ்ரீ எனும் மாணவி 594/600 மதிப்பெண்கள் பெற்று கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு மகத்தான ஒரு சாதனையாகும். மேலும் G.சர்வஜித் 588/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட மாணவச் செல்வங்களுக்கு, பள்ளியின் தாளாளர் பாண்டியன், முதல்வர் பழனியப்பன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பொண்ணாடை அணிவித்தும்,பரிசுகளும் வழங்கி வாழ்த்தினர்.மற்றும் பெற்றோர் பெருமக்கள் மற்றும் இருபால் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.கரூர் மாவட்டம் 96.20சதவீதம் பெற்று மாநில அளவில் 15ஆவது இடம் பெற்றுள்ளது. என்பது குறிப்பிட தக்கது.