!திருவாரூர், மே 9, 2026திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இன்று மேகமூட்டத்துடன் கூடிய இடி மின்னல் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக பெய்த இந்த மழையால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

மழை திருவாரூர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான மாங்குடி, கமலாபுரம், நன்னிலம், புலிவலம், வாழவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மாலை நேரத்திற்குப் பிறகு இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பதிவாகியுள்ளது.காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த எதிர்பாராத கோடை மழையினால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. நீண்ட நாட்களாக வெப்பத்தின் காரணமாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், இந்த மழையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், குறுவை சாகுபடிக்குத் தயாராகும் விவசாயிகளுக்கும் இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை:தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வரும் மே 12 வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை:மின்னல் மற்றும் பலத்த காற்றின் போது பொதுமக்கள் மரங்களுக்கு அடியிலோ, மின் கம்பிகளுக்கு அருகிலோ நிற்பதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *