தியாகராஜர் ஆலய தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருவாரூரில் அமைந்திருக்கும் தியாகராஜர் கோவில்.. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வதோச பரிகாரத் தளமாகவும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தளமாக விளங்கி வருகிறது.

இந்த சிறப்புமிக்க கோவிலில் பங்குனி உத்திரப் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரலாற்று சிறப்புமிக்க ஆழி தேரோட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கமலாலய திருக்குளத்தில் தெப்ப திருவிழா மூன்று நாட்கள் நாள் ஒன்றுக்கு மூன்று சுற்றுகள் வலம் வரும்.

குறிப்பாக சுமார் 2500 சதுர அடி பரப்பளவு உள்ள தெப்பம், 432 காற்று நிரப்பிய பேரல் அடுக்குகளால் கட்டப்பட்டுள்ளது. மேலும் சுமார் 18 அடி உயரம் கொண்டு சுமார் 500 பேர் அமரும் வகையில் அமையப் பெற்றுள்ளது. மேலும், பிரமாண்டமான தெப்பம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது,

இந்த தெப்பத்தில் பிரபல இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது, ஏராளமான பொதுமக்கள் ஏரி வலம் வந்தனர் நேற்று தொடங்கிய தெப்பத் திருவிழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்ட, மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தார்கள், தெப்பவிழாவை பல ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *