பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

விஜய் முதல்வர் பதவியேற்பு-பாபநாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்….

தமிழக முதல்வராக பொறுபேற்று இருக்கும் முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்கும் விழாவினை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்அலி அறிவுறைப்படி பாபநாசம் சட்டமன்ற தொகுதி செயலாளர் அசாருதீன் உதுமான் அலி ஆலோசனையின் படி பாபநாசம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் முன்னிலையில் பாபநாசம் பேரூர் செயலாளர் உதயசூரியா தலைமையில் திருப்பாலைத்துறையில் உள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

பின்னர் பாபநாசம் கட்சி அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்று நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பாபநாசம் காங்கிரஸ் வட்டார தலைவர் தமிழ்ச் செல்வன் , பாபநாசம் நகர தலைவர் பாலாஜி,நகர துணைத் தலைவர் ஜார்ஜ் ,தொழிற்சங்க தலைவர் சித்தார்த்தன் தமிழக வெற்றிக் கழகத்தின் பாபநாசம் பேரூர் பொருளாளர் செல்லப்பா, பேரூர் துணைச்செயலாளர் மணிமாறன் ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் பாலா,சதீஷ் , நகர்புற த.வெ.க நிர்வாகிகள் சச்சின்,ராஜீவ்காந்தி,
லெனின்,சமந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *